கத்திக்குத்தில் இருவர் பலி; இருவர் காயம்
10-10-2016 11:10 AM
Comments - 0       Views - 240

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், இனந்தெரியாத நபர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இரவு 9 மணியளவில் கத்திக்குத்துக்குள்ளாகியுள்ளதாக அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

கத்திக்குத்துக்குள்ளானவர்களில், தந்தையும் இளைய மகனும் உயிரிழந்துள்ளதுடன், தாயும் மூத்த மகனும் கடும் காயங்களுக்குள்ளான நிலையில், அங்குணுகொலபெலஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், தங்கல்லை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நால்வரும், தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாக இந்த கத்திக்குத்துத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பித்துச் சென்றுள்ள நிலையில் அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

"கத்திக்குத்தில் இருவர் பலி; இருவர் காயம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty