2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

Ford இன் Truck Month

Gavitha   / 2016 ஒக்டோபர் 19 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

Ford மோட்டர் கம்பனி மற்றும் அதன் உள்நாட்டு பங்காளரான சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் அங்கத்துவ நிறுவனமான ஃபியுச்சர் ஒடோமொபைல்ஸ் (பிரைவெட்) லிமிட்டெட் ஆகியன இணைந்து ஒக்டோபர் மாதத்தில் உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு விசேட சலுகைகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் “Ford Truck Month” செயற்றிட்டத்ைத அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளன.  
இலங்கையைச் சேர்ந்தவர்களுக்குப் புதிய Ranger வாகனமொன்றின் உரிமையாளராகத் திகழ்வதற்கு பொருத்தமான தருணத்தையும் சிறந்த சலுகையையும் இந்தப் புதிய செயற்றிட்டம் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Ford மோட்டர் கம்பனியின் ஆசிய பசுபிக் வளர்ந்து வரும் சந்தைகளின் முகாமைத்துவப் பணிப்பாளரான டேவிட் வெஸ்ட்டர்மன் கருத்துத்தெரிவிக்கையில், “எமது Built Ford Tough” பாரம்பரியத்தை ஒக்டோபர் மாதம் முழுவதும் கொண்டாடுவதையிட்டு நாம் பெருமையடைகிறோம், இதனூடாக ட்ரக் பிரிவில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ள Rangerக்கு விசேட சலுகைகளை வழங்கக்கூடியதாகவுள்ளது” என்றார். 

நீடித்து உழைக்கும் திறன், பாதுகாப்பு மற்றும் இயங்குதிறன் போன்றவற்றுக்கு நம்பிக்கையை வென்றதுடன், புகழ்பெற்ற pickup ட்ரக் வகைகளை உலகளாவிய ரீதியில் சிறந்த தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி Ford உற்பத்தி செய்கிறது. F-150 முதல் Ford Ranger வரை மக்கள் மனதில் Ford ட்ரக்கள் மீதான விருப்பம் ஆழமாகப் பதிந்துள்ளது. 

Ford சிறந்த விற்பனையைப் பதிவு செய்துள்ள வாகனமான Ranger pickup ட்ரக் பிரிவில் சிறந்த தெரிவாக அமைந்துள்ளது. இதில் சிறந்த இயலுமை, பாதுகாப்பு, வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் போன்றன நாளாந்தம் காணப்படும் சவால்களுக்கு தீர்வுகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளன.  

நிலத்திலிருந்து 230 mm உயரத்தைக் கொண்டுள்ள Ranger, கடுமையான சூழல் நிலைகள், மோசமான காலநிலைகள் மற்றும் மேடு பள்ளங்கள் போன்றவற்றில் சிறப்பாக இயங்கும் வகையில் அமைந்துள்ளது.  
புதிய Ranger அழகிய தோற்றம், ஸ்மார்ட் மற்றும் செயற்றிறன் வாய்ந்த உட்புறம் ஆகியவற்றுடன், உயர் தரம் வாய்ந்த water-wading, towing மற்றும் payload இயலுமைகள் காணப்படுகின்றன.  Ranger இல் காணப்படும் உயர் பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் மூலமாக, பயணிப்பவருக்குச் சிறந்த பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .