2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொரளையில் யூனியன் வங்கியின் 65ஆவது கிளை

Gavitha   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் வங்கி, அதன் 65ஆவது கிளையை இல. 40, ஞானரத்ன ப்ரதீப மாவத்தை. கொழும்பு 08 என்ற முகவரியில் அங்குரார்ப்பணம் செய்துள்ளது. இவ்வங்கிக் கிளையானது, வங்கியின் முழுமையான பொருட்கள் மற்றும் சேவைகளை சில்லறை வர்த்தக வங்கியியல், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க, தயார்நிலையில் உள்ளது.   

பொரளையில் உள்ள இந்தப் புதிய கிளையானது, யூனியன் வங்கியின் புதிய மற்றும் துடிப்பான ஆளுமை நிறைந்த வங்கிச் சேவைகளைப் பிரதிபலிக்கினறது. இந்தக் கிளையானது, வாடிக்கையாளர்கள் சௌகரியமாகத் தமது வங்கி அலுவல்களை நிறைவேற்றும் வகையில், திறந்த, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட, அனுசரணை நிறைந்த சூழலைக் கொண்டு, புத்தாக்கம் செய்யப்பட்ட வங்கி அனுபவத்தினை, ஸ்நேகபூர்வமான வாடிக்கையாளர் சேவையுடன் அளிக்கக் காத்திருக்கின்றது . 

இந்த வங்கிக் கிளையானது வைபவ ரீதியாக, யூனியன் வங்கியின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்கிரமசிங்கவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவில் கருத்துரைத்த அவர் “இந்தப் புதிய கிளை வடிவமைப்பானது, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு உச்ச மட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், அதீத பெறுமதி மற்றும் சௌகரியமான வங்கி நடவடிக்கைகள் ஆகியவற்றை அளிக்கும் துரித கதியில் முன்னேற்றமடையும் வங்கி என்ற யூனியன் வங்கியின் கருப்பொருளையும் பிரதிபலிக்கின்றது. எமது இந்தபுதிய பொரளை கிளையானது, வாடிக்கையாளர்களுக்கு வசதியான சுற்றுச்சூழலை அளிப்பதுடன், தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளையும், ஒருங்கிணைக்கப்பட்ட சுயசேவைகளையும், நிபுணத்துவ ஆலோசனைகளையும் அளிக்கும்.

இதனூடாக வாடிக்கையாளர்கள், தமது நிதியை முகாமைத்துவம் செய்வற்கு பொருத்தமான விரும்பிய சேவை முறையினைத் தேர்ந்தெடுக்க முடியும். யூனியன் வங்கியானது, கடந்த 20 வருடங்களாக ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கையின் வலு மீது கட்டியெழுப்பப்பட்ட வரலாற்றை மேலும் முன்னெடுத்தவாறு, நாட்டின் தேசிய பொருளாதாரத்துக்கு குறிப்பிடத்தக்களவில் பங்களிப்பு நல்கும் தொழில் முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் ஆகியோரை மேம்படுத்துவதான தமது கடப்பாட்டைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும்” என தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .