இலங்கைப் பெண் குவைத்தில் கைது
20-10-2016 03:26 PM
Comments - 0       Views - 350

குவைத் நாட்டில், சட்டவிரோத மதுபானத் தொழிற்சாலையொன்றை நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த பெண்ணை, அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளதுடன், 400 மதுபானப் போத்தல்கள், 10 பரல்கள் மற்றும் மதுபானம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

'பைய்ஹா' என்ற இடத்தில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த குறித்த பெண்ணை, பல நாட்கள் இரகசியமாக அவதானித்த பின்னரே, பொதுப் பாதுகாப்பு விவகார அமைச்சு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பின்னர் இவர், தடயப் பொருட்களுடன் உரிய அதிகாரிகளிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"இலங்கைப் பெண் குவைத்தில் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty