2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தவறான கைது: நட்டஈடு செலுத்த பொலிஸாருக்கு உத்தரவு

George   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிடியாணையில் குறிப்பிடப்பட்டிருந்ததைப் போல முதலெழுத்துகளுடன் பெயர் இருந்த வியாபாரியொருவர், இரகசிய பொலிஸாரால் கடந்த 2010ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைதுசெய்து சட்டவிரோதமாக தன்னை தடுத்து வைத்து, அடிப்படை உரிமையை மீறியதாக மேல்நீதிமன்றத்தில் வியாபாரியால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வியாபாரிக்கு நட்டஈடாக 3 இலட்சம் ரூபாயை வழங்குமாறு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அங்கொடை, ஹிம்புட்டாகே பிரதேசத்தைச் சேர்ந்த முதலியக காமினி என்ற வியாபாரியால் தாக்கல் செய்யப்பட்டஇந்த மனுவில், பிரதிவாதியாக பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா,  பொலிஸ் சார்ஜன்ட் மென்டிஸ்,  மற்றும் பொலிஸ் பரஜசோதகர் ரஞ்சித் முனசிங்க ஆகியோர் பெயர்குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்ப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .