2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மின்விளக்கை அணைத்து விட்டு யானைகள் அட்டகாசம்

Niroshini   / 2016 ஒக்டோபர் 20 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வயல்களில் யானைகளை அச்சுறுத்தவதற்காக போடப்பட்டுள்ள மின்விளக்குகளை யானைகள் உடைத்த பின்னர் வயல்களை நாசம் செய்வதாக கொக்கிளாய் மக்கள் விசனம் தெரிவித்தனர்.

“கொக்கிளாய் பகுதியில் தனியானை ஒன்று, மற்றும் சிறுகூட்டம் கொண்ட யானைகள் இருக்கின்றன. இந்த யானைகள் மக்களுடன் பழக்கப்பட்ட யானைகளாக உள்ளன. ஏனெனில், காட்டு யானைகள் மனித நடமாட்டம் உள்ள இடங்களுக்கு வராது. ஆனால், இவை வாகனங்கள் செல்லும் போது, வீதியின் அருகில் நிற்கின்றன. மனிதர்களை இதுவரையில் அவை தாக்கியதும் இல்லை.

காட்டு யானைகள் சிறு வெளிச்சம் இருந்தால், அந்த இடத்துக்கு வராது. இதனால் வயல்களில் இரவில் மின்குமிழ்களை ஒளிரவிடுவோம். ஆனால் இந்த யானைகள், முதலில் அந்த மின்குமிழ்களை சென்று உடைத்துவிட்டு, அதன் பின்னர் வயலை நாசம் செய்கின்றன.

இதனால், இந்த யானைகளை வேறு இடங்களில் இருந்து கொண்டு வந்த இங்கு விடப்பட்டதாக நாங்கள் நினைக்கின்றோம். இது நன்கு பழக்கப்பட்ட யானைகளாக இருக்கின்றன” என அக்கபுதி மக்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .