2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஃபெயார்வே Galle Literary Festival நிகழ்வின் விவரங்கள் வெளியீடு

Gavitha   / 2016 ஒக்டோபர் 23 , மு.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016ஆம் ஆண்டுக்கான நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்திருந்ததைத் தொடர்ந்து, ஃபெயார்வே Galle Literary Festival மீண்டும் 2017 ஜனவரி 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தொடர்ந்து 8ஆவது ஆண்டாக நடைபெறவுள்ள இந்நிகழ்வில், ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமான புதிய அம்சங்கள் உள்ளடக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும். 2017இல் நடைபெறும் நிகழ்வில், பல புகழ்பெற்ற எழுத்தாளர்களான பிலிப்பா கிரெகரி, கத்ரீன் போ மற்றும் கிறிஸ்டினா லம்ப் போன்றவர்களின் ஆக்கங்களும் உள்ளடக்கப்படவுள்ளன.   

புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டவரும், நியுயோர்க் டைம்ஸின் முதல் தர விற்பனையை பதிவு செய்தவருமான பிலிப்பா கிரெகரி, அவரின் நாவலான “The Other Boleyn Girl,” மூலம் உலகப்பிரசித்திப்‌ பெற்றுள்ளார். காலப்போக்கில் இந்த நாவல் திரைப்படமாக நடாலி போர்ட்மன் மற்றும் ஸ்கார்லெட் ஜொஹான்சன் ஆகியோரைக்கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தது. கிரெகரி பல புகழ்பெற்ற வரலாற்று நாவல்களை எழுதியுள்ளார்.   

ஃபெயார்வே ஹோல்டிங்ஸ் தலைவரான ஹேமக டி அல்விஸ் கருத்துத் தெரிவிக்கையில், “ஃபெயார்வே Galle Literary Festival சர்வதேச மட்டத்தில் இலக்கியத் திருவிழாவாகத் தனக்கென அடையாளத்தைப் படைத்துள்ளதாக நான் நம்புகிறேன். இந்த ஆண்டு, இலங்கையின் எழுத்தாளர் சமூகத்துக்கு, சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர்களை சந்தித்து, உரையாடி அவர்களிடமிருந்து அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் ஃபெயார்வே Galle Literary Festival வாய்ப்பளிக்கிறது.

வருடாந்த ஃபெயார்வே தேசிய இலக்கிய விருதுகளும் FLGF காலப்பகுதியில் நடைபெறுவதுடன், சர்வதேச மட்டத்தில் இதை உள்நாட்டில் முன்னெடுக்கக்கூடியதாக உள்ளது. எமது நம்பிக்கைக்கு அப்பால் சென்று, எழுத்தாற்றல் துறையில் சிறந்து திகழ்வோரை ஒன்றுகூட்டி கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் FLGF நிகழ்வுக்கு ஃபெயார்வே ஹோல்டிங்ஸ் அனுசரணை வழங்குவதையிட்டு மகிழ்ச்சியடைகிறது” என்றார்.   

ஃபெயார்வே ஹோல்டிங்ஸ் மற்றும் உத்தியோகபூர்வ பங்காளர்களாக – ஜெட்விங் ஹோட்டல்ஸ், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீ லங்கா டெலிகொம் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இந்தத் திருவிழாவின் தொடர்ச்சியான முன்னெடுப்புக்குப் பங்களிப்பு வழங்கிவருகின்றன.  

The British Council, Galle Face Hotel, The Fort Printers, Anim 8 மற்றும் Owl and the Pussycat ஆகியன வெள்ளி அனுசரணையாளர்களாகத் தொடர்ந்து இணைந்துள்ளதுடன், புதிய வெள்ளி அனுசரணையாளராக குணரட்ன ஓஃவ்செட் இணைந்துள்ளது. தங்குமிட பங்களார்களாக Fort Bazaar Hotel and Spa, Tamarind Hill, Taru Villas, Judy Green, Kahanda Kanda and Why House & Friends of the Festival comprise Barefoot, Perera Hussein Publishing House, YAMU, Ishan, Favourites, Anantara Hotels, Resorts and Spas, Esufally Family Foundation and Antic போன்றன இணைந்துள்ளதுடன், டிக்கட் அனுசரணையாளராக Mydeal.lk இணைந்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X