2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நிரந்தரப் பணியில் டெலிகொம் வெளிவாரி ஊழியர்கள்

Gavitha   / 2016 ஒக்டோபர் 23 , மு.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெலிகொம், தனது கம்பனியுடன் இணைந்துள்ள “ஹ்யூமன் கப்பிட்டல் சொலூஷன்ஸ்” (HCS)ஐ சேர்ந்த 121 வெளிவாரி ஊழியர்களைத் தனது நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்களாக நியமித்துள்ளது. இந்த ஊழியர்கள், டெலிகொமின் ஊழியர் சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு திட்டத்துக்கு (SRPS) அமைய, தகுதிகளைப் பூர்த்தி செய்தவர்களாவார்.

அண்மையில் டெலிகொம் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்தப் புதிய நியமனம் பெற்றவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வில் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர், ஹரின் பெர்னாண்டோ மற்றும் டெலிகொம் தலைவர் குமாரசிங்க சிறிசேனவும் கலந்துகொண்டனர்.   

இந்தச் சிறப்பு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், “தாய்க்கம்பனியான டெலிகொம்மினால் நியமிக்கப்படுகின்ற பொன்னான வாய்ப்பு உங்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளது. இந்த நியமனங்கள் மூலமாக, டெலிகொம், HCS ஊழியர்களைத் தனது ஆட்சேர்ப்பு விதிகளுக்கமைவாக நியமித்துக்கொள்வதில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

டெலிகொம் (HCS) தலைவர் குமாரசிங்க சிறிசேன இப் புதிய நியமனங்கள் பற்றிய தனது கருத்தாக, “நாம், இந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை மாற்றி, நாட்டுக்கும் எமது மக்களுக்கும் சேவையாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம். வலுமிக்க வேலைப்படையை ஆதரிப்பதன் மூலம் நல்ல பெறுபேறுகளைப் பெறுவது, அக்கம்பனியின் மனிதவளத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நாம் சகலருக்கும் சம வாய்ப்புக்களை நியாயமான முறையில் வழங்குவதற்கு எம்மால் இயன்ற முயற்சிகளைச் செய்கிறோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .