2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிரெஞ்சு பயண முகவர் மாநாட்டை முன்னெடுக்கும் BMICH

Gavitha   / 2016 ஒக்டோபர் 23 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரெஞ்சு பயண முகவர் மாநாடு Les Journees des Entrepreneurs du Voyages (JEV)இன் வருடாந்த மாநாட்டினை ஒக்டோபர் 31 முதல் நவம்பர் 4 திகதி வரை BMICH முன்னெடுக்கவுள்ளது. மிகச்சிறந்த சுற்றுலாத்தளங்களுக்கான மிகமுக்கிய வருடாந்த நிகழ்வாகக் கருதப்படும் இந்நிகழ்வினை முன்னெடுப்பதற்காக இந்த வருடம் இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

JEV ஆனது பிரான்ஸ் நாட்டில் 1,400 சுற்றுலான நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், வருடாந்தம் 24 பில்லியன் யூரோவுக்கும் அதிகமான வருவாயை ஈட்டி வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான 500 இற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் வெளியிணைப்புப் பயண முகவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

சுற்றுலா செல்வதற்கு பாதுகாப்பான அமைவிடங்களில் ஒன்றான இலங்கை உருவானதன் பின்னர் பிரெஞ்சு சுற்றுலாப்பயணிகளுக்கான வருகை 13%ஆல் அதிகரித்திருந்தது.   
MICE துறை, சந்திப்புகள், ஊக்கங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் போன்றவற்றை ஊக்குவித்து இலங்கை சுற்றுலாத்துறைச் சார்ந்த உற்பத்திகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை காட்சிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக இந்தப் பிரெஞ்சு பயண மாநாடு திகழ்வதுடன், இந்த நிகழ்விற்கு அரசும் முன்னுரிமையளித்து வருகிறது. இலங்கையின் இந்த வருடத்துக்கான சுற்றுலாப்பயணிகள் இலக்கு 2.5 மில்லியன் ஆகும்.

BMICH இன் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சுனில் திசாநாயக்க கருத்து தெரிவிக்கையில், “பிரெஞ்சு பயண முகவர் மாநாடானது, எமது பொழுதுபோக்கு துறையை மேம்படுத்த உதவியாகவும், நாட்டிடுக்கான பொழுதுபோக்கு பிரயாணிகளின் வருகையை அதிகரிக்கும் எனவும் BMICH நம்புகிறது. இந்த மாநாட்டுடன் இணைந்திருப்பது குறித்து BMICH பெருமையடைகிறது” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .