2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு யாழ்ப்பாணத்துக்கு அச்சுறுத்தல்

Gavitha   / 2016 ஒக்டோபர் 23 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிஜோபன்,சண்முகம் தவசீலன்

'யாழ்ப்பாணத்தை ஒரு அச்சமான சூழ்நிலைக்குள் வைத்திருப்பதற்காகவே, பல்கலைக்கழக மாணவர்கள் மீதான படுகொலை அமைந்துள்ளது' என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞனம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (21) அதிகாலை, கொக்குவில் குளப்பிட்டிச்சந்தியில், இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை சனிக்கிழமை (22) அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  

'துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்து சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கல்வி பயின்று, பல்கலைக்கழகம் வந்தவர்களை, நடு வீதியில் வைத்து மூர்க்கத்தனமாக பொலிஸார் சுட்டுக்கொன்றமையானது, வன்மையாக கண்டிக்க வேண்டிய விடயமாகும்.

இந்த மாணவர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினூடாக, யாழ்ப்பாணத்தின் நீதித்துறைக்கும் நல்லாட்சி அரசாங்கத்துக்கும் பயங்கரமான எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டிருக்கின்றது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்' என்று அந்த அவர் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும், 'குமாரபுரம் படுகொலைத் தீர்ப்பைப் போன்று இச்சம்பவத்தையும் இனிவரும் காலங்களில் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடும். எனினும், இந்தக் கொலைச்சம்பவத்துக்கான நியாயமான தீர்ப்பு வரும் வரை, நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்படல் வேண்டும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள நிலைமையை குழப்புவதற்கு, பொலிஸாரை வைத்து அரசாங்கத்தால் நடத்தப்பட்ட நாடகம் இதுவாக இருக்குமோ என்ற சந்தேக மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .