2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சியபத ஃபினான்ஸ் தலைவராக அரவிந்த பெரேரா

Gavitha   / 2016 ஒக்டோபர் 23 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சியபத ஃபினான்ஸ் பிஎல்சியின் தலைவராக எம்.வை.அரவிந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் 2016 ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அரவிந்த பெரேரா சியபத ஃபினான்ஸ் பிஎல்சியின் பணிப்பாளராக செயலாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

இந்த நியமனத்துக்கு முன்னதாக, சம்பத் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளராகப் பெரேரா, 2012 ஜனவரி 1ஆம் திகதி முதல் செயலாற்றியிருந்தார். இவர் 2016 செப்டெம்பர் மாதம் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. வங்கியியல் துறையில் 30 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக்கொண்டுள்ள பெரேரா, இலங்கையின் வங்கியியல் துறையில் காணப்படும் சிறந்த வங்கியியல் நிபுணர்களில் ஒருவராக தரப்படுத்தப்பட்டுள்ளார்.  

ஏசியன் பாங்கர் சஞ்சிகையினால் வழங்கப்பட்ட “பிரதம நிறைவேற்று அதிகாரி தலைமைத்துவ சாதனை விருது 2016” இவர் பெற்றுக்கொண்டார். அத்துடன், இவர் பெருமைக்குரிய “பிளாட்டினம் விருது -2014” என்பதை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் PIMA இடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.  

தற்போது பெரேரா, எஸ்.சி. செக்கியுரிட்டீஸ் (பிரைவெட்) லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றுகிறார். இது சம்பத் வங்கியின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஹேலீஸ் பிஎல்சியின் சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் என்பதுடன், ஹேலீஸ் பிஎல்சியின் கணக்காய்வுக் கழகத்தின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பணிப்பாளராக பெரேரா பணியாற்றி வருகிறார். ஹேலீஸ் இன்டஸ்ரியல் சொலூஷன் (பிரைவெட்) லிமிட்டெட் மற்றும் ஃபென்டன்ஸ் லிமிட்டெட் ஆகியவற்றின் பணிப்பாளராகவும் கடமையாற்றுகிறார். மேலும், இவர் லங்கா ஃபினான்ஷியல் சேர்விசஸ் பியுரோ லிமிட்டெட்டின் முன்னாள் பணிப்பாளர் என்பதுடன், இலங்கை வங்கியியலாளர் கல்வியகத்தின் பரிபாலன சபைப் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X