2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ʻPath to Your Real Successʼ கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது

Gavitha   / 2016 ஒக்டோபர் 23 , பி.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பன்னிபிட்டிய Pace Institute  நிறுவனத்தினர் ஏற்பாடு செய்த “Path to Your Real Success”கருத்தரங்கு மிகச் சிறப்பாக அண்மையில் நடைபெற்றது. வாழ்க்கையில் வெற்றி பெற சிறுவயது முதலே தம்மிடம் காணப்படும் திறமைகள் ஊடாக வழி அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக அமைந்தது.   

அதற்கமைய கல்விசான்றிதழ்களைச் சேகரிக்கும் சம்பிரதாயக் கல்வி முறைமைக்கு புறம்பாக, தொழில் சார்ந்த வல்லுனர்களை உருவாக்குவது எவ்வாறு? என்பது தொடர்பாக இந்தக் கருத்தரங்கில் மிக ஆழமாக கலந்துரையாடப்பட்டது.  

உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக முன்னெடுக்கத் தேவையான தொழிற்பயிற்சி என்ன? சான்றிதழ் மட்டும் தொழில்சார் முன்னேற்றத்துக்கு  போதுமானதா? நவீனஉலகிற்கு உகந்த தொழில்பயிற்சி மற்றும் பாடநெறி என்ன? அதிக சம்பளம் கிடைக்கும் தொழில் என்ன? அவற்றைப் பெற்றுக்கொள்வது எவ்வாறு? போன்ற கேள்விகள் தொடர்பாக இதன் போது அதிககவனம் செலுத்தப்பட்டது.   

கருத்தரங்கில் கருத்துத் தெரிவித்த  Pace institute நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பணிப்பாளர் சஜித் டி சில்வா கருத்து தெரிவிக்கையில், தொழிலாளர் சிறந்த ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டவராக இருக்கவேண்டும் என்பதையே தொழில் வழங்குனர்கள் எதிர்பார்ப்பாதக கூறினார். இலகுவாக தொழிலில் ஈடுபடுத்தக்கூடியவராக இருக்க வேண்டும் எனத் தொழில் வழங்குனர்கள் எதிர்பார்ப்பதாகவும் எதிர்காலத்தில் தமது நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களையே அவர்கள் விரும்புவதாக அவர் கூறினார்.   

இன்று தனியார் துறையில் பாரியதொழில் வாய்ப்புக்கள் உள்ளபோதிலும், தொழிலை எதிர்பார்த்து இருக்கும் அநேக இளைஞர் யுவதிகளுக்கு தனியார் துறையினர் எதிர்பார்க்கும் தொழில்சார் திறமைகள் குறைவாகவே உள்ளது என Pace institute  நிறுவனத்தின் பணிப்பாளர் கபில விதானகே குறிப்பிட்டார்.

ஆகையால் நேர்முகப்பரீட்சைக்கு அநேகரை அழைக்கவேண்டி உள்ளதாகவும், பின்னர் அவர்களின் தொழில்சார் பயிற்சிகளுக்காக அதிக நிதியினைச் செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.   
இதன்போது கருத்து தெரிவித்த  Pace institute நிறுவனத்தின் விரிவுரையாளர் லக்மால் ரத்நாயக்க, நிகழ்கால போட்டித்தன்மை கொண்ட கல்வி முறையில் அநேகர் சான்றிதழ்களை இலக்கு வைத்து படிக்கின்றனர்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .