2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'இரு மொழிகளையும் கற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்'

Niroshini   / 2016 ஒக்டோபர் 23 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

“தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு சிங்கள மொழியையும், சிங்களத்தை தாய் மொழியாக கொண்ட சிங்கள மாணவர்களுக்கு தமிழ் மொழியையும் கற்றுக் கொடுப்பதற்கு கல்வி அமைச்சினூடாக துரித நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில், இன்று கண்டி தர்மராஜ கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களையும் விருதுகளையும் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“கேட்டல் திறன், பேச்சுத் திறன், வாசிப்புத்திறன், எழுத்துத்திறன் ஆகிய 4 பண்புகளைக் கொண்டதே மொழியாகும். இதில் பொதுவாக பேச்சு என்பது மொழிக்கு மிக முக்கிய கூறாகவும் உள்ளது. பேச்சுக்கு ஒலி வடிவம் மிக முக்கியமானதாகும். மொழிகள் பற்றிய ஆய்வுகளில் தமிழ் மொழி பல்லாயிரம் வருடங்கள் தொன்மையானது என்று கூறப்பட்டாலும் மொழிகளைப் பொறுத்த வரை காலங்கள் எதனையும் உறுதிபடக்கூற முடியாதுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு பிரகடனங்களை நிறைவேற்றியுள்ளன. அதில் முக்கிய மாக ஒரு நாட்டில் எந்த மொழியை மக்கள் பேசுகின்றனரோ அந்த மொழியில் அவர்கள் கல்வி கற்ற வசதிசெய்யப்பட வேண்டும். அதேநேரம் அம்மொழியிலே அவர்கள் தமது பணியை நிறைவேற்றவும் வகை செய்யவேண்டும் என்பதாகும்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஹிந்தி பிரதான மொழியாக இருந்தாலும் தமிழ் மொழியில் காவியங்களும் காப்பியங்களும் இலக்கியத் தொகுப்புக்களும் உள்ளன. ஒருவரது அடிப்படை உரிமைகளில் ஒன்றுதான் அவரது மொழியாகும். எனவே, அரசாங்கம் என்ற வகையில் ஒருவரது மொழியில் எல்லாவற்றிலும் சம வாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .