2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மேலும் 10,000 வீடுகள் அமைக்க வாய்ப்பு கிட்டியுள்ளது’

Niroshini   / 2016 ஒக்டோபர் 23 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், ஆர்.கோகுலன், ஆ.ரமேஷ்

“அடுத்தவருடம் மேலும் பத்தாயிரம் வீடுகள் கட்டுவதற்கான வாய்ப்பு  பிரதமர் ஊடாக கிடைக்கப்பட்டுள்ளது” என மலைநாட்டு புதிய கிராமங்கள்  உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி  அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மீறியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களுக்கும் மக்கள்தெனியவில் நிர்மாணிக்கப்பட்ட 75 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை(22) மாலை இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் எனக்கு கிடைத்த அமைச்சினைப் பொறுப்பேற்றதும் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்தாலோசித்து மலையக பெருந்தோட்ட மக்களுக்கு தனி வீடுகளை கட்டியமைக்க திட்டமிட்டு, எனது அமைச்சின் ஊடாக தனி வீடுகளை அமைக்கும் வாய்ப்பு  கிடைத்தது.

இந்த வகையில் மலையகத்தில் இதுவரை 5,000 வீடுகள் இனங்கண்டு வீடுகளின் கட்டுமானப்பனிகளும் பூர்த்தியாகி வருகின்றன” என்றார்.

“மீரியபெத்த மக்களுக்கு கட்டிக் கொடுகாகப்பட்டுள்ள இந்த வீடுகளை எதிர்வரும் 29ஆம் திகதி  கையளிக்க தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இருந்தும் தீபாவளிக்கு முன் இந்த வீடுகளை இம்மக்களுக்கு வழங்கினால் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் தீபாவளி திருநாளை கொண்டாட வாய்ப்பாக அமையும் என அமைச்சரிடம் கேட்டுகொண்டமையடுத்தே இந்த வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன” எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .