2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'பேதமின்றி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகின்றேன்'

Niroshini   / 2016 ஒக்டோபர் 23 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

“கடந்த காலத்தில் மலையகத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதி வருட இறுதியில் திரைசேரிக்கு திரும்பி சென்றதே வரலாறு. ஆனால், கடந்த ஒரு வருட காலமாக எனக்கு கிடைத்துள்ள அமைச்சினூடாக மலையக தழுவிய ரீதியில் கட்சி பேதமின்றி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகின்றேன்” என மலையக புதிய கிராமங்கள் உட்டகட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் தெரிவித்தார்.

உலக வங்கியில் நிதீயொதுக்கீட்டில் பெருந்தோட்டப்பகுதிகளில் நவீன வசதிகளை கொண்ட வகையில்  மஸ்கெலிய - காகொலை தோட்டத்தில் அமைக்கப்படவுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை  அடிக்கல் நாட்டிவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“அரசாங்கம் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவே நிதியொதுக்கீடு செய்கின்றது. அதை பயன்படுத்த வேண்டும். கடந்த காலத்தில் திரைசேரிக்கு திரும்பி சென்றது. தற்போது அவ்வாறு அல்ல. பரந்த அளவில் வீடமைப்பு பாதை புனரமைப்பு மற்றும் அடிப்படை வசத்திகள் என வேலைத் ட்டங்கள் நடைபெறுகின்றன.

அதேபோல சம்பளவுயர்வு கோரி 2006ஆம் ஆண்டு போராட்டங்களை முன்னெடுத்தது முதலில் நாமே தற்போது நான் காட்டிக்கொடுத்ததாக சிலர் பிரசாரம் செய்கின்றனர். துரோகம் செய்ததும் காட்டிக்கொடுத்ததும் நாம் அல்ல. 50 ரூபாய் சம்பள அதிகரிப்பே கிடைத்துள்ளது. போலியான வாக்குறுதிகளை வழங்கியவர்கள் தற்போது நான் 2,500 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வாங்கிக்கொடுத்தாலே நிலுவை கொடுப்பனவை பெற்றுகொடுக்க முடியவில்லை எனத் தெரிவிக்கின்றனர். இவை பொய் இயலாமையை மறைக்கவே இவ்வாறு கூறுகின்றனர். 

தொடர்ந்து தொழிற்சங்க பலத்தை எனக்கு தாருங்கள் அடுத்த வருடத்தில் 10,000 வீடுகளை கட்டிக்கொடுக்கவுள்ளேன். தீபாவளிக்கு 3,500 வேண்டும் என கோரிக்கை விடுத்தது நானே. தற்போது சில நான் தான் பெற்றுக்கொடுத்தேன் என தெரிவிக்கின்றனர். இவ்வாறானவர்களிடத்தில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். நானும் தோட்டத்திலிருந்து வந்தவன். உங்கள் நிலையை நன்குணர்ந்தவன்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .