2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'மரமுந்திரிகைத் தோட்டத்தினை பகிர்ந்து தர வேண்டும்'

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 23 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி திக்குவில் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட மரமுந்திரிகைத் தோட்டத்தினை ஜெயபுரம் கிராம மக்கள் தமக்கு பகிர்ந்தளிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லையென கிராம மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் மரமுந்திரிகை மரங்கள் உள்ளபோதிலும் இக்காணியில் தற்போது இராணுவத்தினரே நிலை கொண்டுள்ளனர். கடந்த ஆட்சிக் காலத்தின் போது ஜெயபுரம் கிராம மக்கள் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள மரமுந்திரிகைக் காணியினை தமக்குப் பகிர்ந்தளிப்பதன் மூலமாகவோ அல்லது பராமரிப்புகள் மேற்கொண்டு மரமுந்திரிகையின் பலன்களை பெறுவதற்கான வழிகளை உருவாக்குங்கள் எனக் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் குறித்த காணியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறவில்லை.

இறுதியாக நடைபெற்ற பூநகரிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இவ்விடயம் ஆராயப்பட்ட போதிலும் இறுதி முடிவுகள் எவையும் எடுக்கப்படவில்லை. 1983ஆம் ஆண்டு தென்னிலங்கையின் வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென உருவாக்கப்பட்ட ஜெயபுரம் கிராம மக்களுக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 526 ஏக்கர் வயல் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படாத நிலையில் மரமுந்திரிகைக் காணியினை பயன்பாட்டிற்கு வழங்குவதன் மூலம் இக்கிராம மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும் என்பதுடன், ஜெயபுரம் கிராமத்தில் தற்போது 426 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .