2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'ஆனைவிழுந்தான்குளம் கிராமத்துக்கு பஸ் சேவையில்லை'

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 23 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான்குளம் கிராமத்துக்கு பஸ் சேவையினை நடத்துமாறு இக்கிராம மக்கள் நீண்டகாலமாக விடுத்துவரும் கோரிக்கை தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக கிராம மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

1983களில் இக் கிராமம் உருவாக்கப்பட்டது. அக்காலத்திலிருந்தே கிராமத்துக்கு பஸ் சேவைகள் இடம்பெறுவதில்லை. இரண்டு கிலோமீற்றருக்கு அதிகமான தூரம் நடந்துசென்று வன்னேரிக்குளம் அக்கராயன் வீதியில் பயணிக்கும் பஸ்களில் இம் மக்கள் பயணிக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் எமது கிராமத்துக்குத் தனியான பஸ் சேவையினை நடத்துவதன் மூலம் கிராம மக்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் போக்குவரத்தில் இலகுவாக ஈடுபடமுடியும். எமது கிராமத்துக்;கான தனியான பஸ் சேவைகள் இல்லாததன் காரணமாக எமது கிராமப் பாடசாலைக்கு ஆசிரியர்கள் வருகை தருவதற்கு அச்சம் தெரிவிக்கின்றார்கள்.

அத்துடன், அக்கராயன் பிரதேச மருத்துவமனைக்குச் சென்று வருவதற்கு மக்களுக்கு பஸ் சேவை வேண்டும். தனியான பஸ் சேவை பாடசாலை வரை இடம்பெறவேண்டும் என இம் மக்கள் மாவட்டச் செயலரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், இதுவரை இக்கிராமத்துக்கான எந்தவிதமான பஸ் சேவைகளும் இடம்பெறவில்லை. 1983இல் தென்னிலங்கை வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென உருவாக்கப்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் மருத்துவம், போக்குவரத்து, வயல் நிலம் இல்லாமை, கிராமத்தின் மேற்குப் பகுதி உவரடைந்து வருதல் போன்ற பல நெருக்கடிகளுடன் இக்கிராமத்தில் 500 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .