2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வில்கம் விஹார மக்கள் ஆர்ப்பாட்டம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, வில்கம் விஹார பகுதியில் வசித்து வரும் 15 குடும்பங்களைச்சேர்ந்த மக்கள்,  குடிப்பதற்குச் சுத்தமான குடிநீரைப் பெற்றுத்தருமாறு கோரி, திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதியை மறித்து, இன்று திங்கட்கிழமை (24) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்தினால் குடிநீர் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் போதாமையினால், குடிநீர் வழங்கும் திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வில்கம் விஹார பகுதிக்கு, வெள்ளிக்கிழமை (21) வருகைதந்தபோது, குடிநீர் வழங்குவதாக ஜே.சி.பி இயந்திரத்தை வைத்துக்கொண்டு குழாய்கள் பொருத்துதாகக் காண்பித்து, தம்மை ஏமாற்றிவிட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்காக,  குடும்பமொன்றிடமிருந்து  இரண்டாயிரம் ரூபாய் வீதம் வில்கம் விஹாரை கிராம உத்தியோகத்தர் பெற்றுக்கொண்டதாகவும் இதுவரைக்கும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .