2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'கண்ணகிக் கிராம மக்களுக்கு காணி உறுதிகள் பெற்றுக்கொடுக்கப்படும்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

37 வருடங்களாக காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாமல் வாழ்கின்ற அம்பாறை மாவட்டத்தின் கண்ணகிக் கிராம மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்குரிய நடவடிக்கையை தான்  உடனடியாக எடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

மேட்டுநிலம் மற்றும் விவசாயக் காணிகளுக்கான ரன்விம காணி அளிப்புப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு, ஆலையடிவேம்புப் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது,   115 பேருக்கு ரன்விம காணி அளிப்புப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், '1978ஆம் ஆண்டு குடியேற்றம் செய்யப்பட்ட கண்ணகிக் கிராம மக்களுக்காக 247 வீடுகள் வீடமைப்பு அதிகாரசபையால்; அக்காலத்தில் கட்டிக்கொடுக்கப்பட்டன. இவ்வாறு கட்டப்பட்ட வீடொன்றுக்காக 18 ஆயிரம் ரூபாயை வீடமைப்பு அதிகாரசபை செலவு செய்திருந்தது. இவ்வாறு செலவிடப்பட்ட பணத்தை பகுதியளவில் மீளச் செலுத்;த வேண்டும் என்றும்; ஒப்பந்தம் செய்யப்பட்டது. இப்பணத்தை மீளச் செலுத்தும்வரையில் காணிகளின் உறுதிகள் பிணையாக அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டன.

வறுமை மற்றும் யுத்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட அம்மக்களால் குறித்த பணத்தை மீளச் செலுத்த முடியாமல் போயின.    இவ்வீடுகளைப்; பெற்றவர்களில் சிலர் மரணமடைந்துள்ளதுடன், சிலர் வீட்டு வளவுகளை விற்றும் உள்ளனர். இந்நிலையில், ஒரு சில வீடுகளிலேயே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  

இவ்வீடுகளில் வாழ்கின்றவர்களுக்கு கடனைச் செலுத்தாத பட்சத்தில் வங்கிகளில் கடன் பெறுதல் உள்ளிட்ட காரியங்களைச் செய்ய முடியாமல் உள்ளது. பெற்ற கடனை மொத்தமாகச் செலுத்துமாறு அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது. மீளச் செலுத்த முடியாத பட்சத்தில் காணிகளின் உறுதிகள் கையளிக்கப்பட மாட்டாது எனவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், யுத்தத்தாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்ட இக்கிராம மக்கள் மீது கருணை காட்டி, அவர்கள் செலுத்தவேண்டிய பணத்தை  நீக்கி, அவர்களுடைய காணி; உறுதிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் அரசாங்கத்திடம் முன்வைக்கவுள்ளேன்.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், வீடமைப்பு அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுசென்று இம்மக்களுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பேன்' என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .