2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புதிய அரசியல் அமைப்பு ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது

Niroshini   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தற்போது உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியல் அமைப்பும் தேர்தல் முறையும் நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சம சந்தர்ப்பத்தை வழங்கி, நாட்டில் ஒற்றுமையையும் நல்லுறவையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன” என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பதுளை புதிய தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“யுத்தத்துக்குப் பின் உலக நாடுகளும் எமது நாட்டின் மீது யுத்த குற்றச்சாட்டுக்களை சுமத்தி, ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் எமக்கெதிராக தீர்மானங்களை கொண்டுவந்தன. எனினும், நல்லாட்சி அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்று கொண்டதும் உலக நாடுகளில் இழந்துள்ள நம்பிக்கையை பெற நாம் முயற்சித்தோம். அதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

நாம் பதவிக்கு வந்ததும் நாட்டில் தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்தியுள்ளோம். கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில்
ஐ. நாவில் 3 தடவை இலங்கைக்கு எதிராக யுத்த குற்ற தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அந்நிலைமையை நாம் மாற்றியுள்ளோம். உலக நாடுகள் எம்மீது இன்று நல்லபிப்ராயம் கொண்டுள்ளன” என்றார்.

“பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமபுற பாதைகளையும் செப்பனிட நாம் நிதியொதுக்கியுள்ளோம். பதுளை மாவட்டத்தில் ஆயிரம் கிலோமீற்றர் தூரம் காபர்ட் பாதைகள் அமைக்கவும் இம்முறை நிதி ஒதுக்கியுள்ளோம்.

மாகாண முதலமைச்சர் இங்குள்ள பாதைகளை செப்பனிட எமக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்குகின்றார். வெகு விரைவில் இங்குள்ள பாதைகள் அனைத்தும் செப்பனிடப்பட்ட பாதைகளாக தரமுயரும். ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டை பொருளாதார பின்னடைவிலிருந்து விடுவிக்க வேலைத்திட்டங்களை வகுத்து அதன்படி செயற்படுகின்றனர். அதன் பலாபலன்களை நாட்டு மக்கள் விரைவில் அனுபவிப்பர்” எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .