2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை நடவடிக்கை எடுக்க வேண்டும்

Niroshini   / 2016 ஒக்டோபர் 24 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

பெருந்தோட்ட மக்களின் பொருளாதார நெருக்கடியை கருத்தில்கொண்டு,  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சலுகை அடிப்படையில் அத்தியவசிய பொருட்களின் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹட்டனில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 18 மாத காலமாக சம்பளவுயர்வு பிரச்சினைக்கு முகம் கொடுத்த இம்மக்கள், நிலுவை கொடுப்பனவை நம்பியே தீபாவளியை கொண்டாட எண்ணியிருந்தனர். இறுதியில் நிலுவை கொடுப்பனவை கொடுக்க முதலாளிமார் சம்மேளனம் மறுத்துள்ளது.

அத்துடன், தீபாவளி முற்பணக்கொடுப்பனவும் இதுவரையில் முறையாக வழங்கப்படவில்லை. இந் நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கொள்வனவை செய்யமுடியாத நிலையில் பெருந்தோட்ட மக்கள் தடுமாற்றத்தில் உள்ளனர்.

எனவே, அரசாங்கம் சலுகை அடிப்படையில் விலைக்குறைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .