2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வடகாட்டில் யானைகள் தொல்லை

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின், மாந்தை கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வடகாடுப் பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் பெருமளவான பயிரழிவுகள் ஏற்படுவதாகவும் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பயிர்ச் செய்கை நிலங்கள் ஆகியவற்;றுக்குள் தொடர்ச்சியாக காட்டு யானைகள் உட்புகுந்து, பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. மாலை 6.00 மணியாகியதும் ஊர் மனைகளுக்குள் புகும் காட்டு யானைகள், மரவள்ளி, பூசணி போன்ற தோட்டப் பயிர்களையும் அழித்து வருகின்றன. அத்துடன் மா, பலா, தென்னை, போன்ற மரங்களையும் அழித்து வருகின்றன.

இவ்வாறு  திங்கட்கிழமை (24) இரவு ஊர்மனைக்குள் புகுந்த காட்டுயானைகள் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறான யானைகளின் அட்டகாசங்கள், கடந்த காலங்களில் இல்லை என்றும் அண்மைய நாட்களாகவே இவ்வாறு யானைகளின் பாதிப்பு அதிகரித்துள்ளன எனவும் மக்கள் கூறினர்.

தென்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் விடப்பட்ட யானைகளே இவ்வாறு அட்டகாசங்களைச் செய்து வருகின்றன என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .