2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலவச வழிகாட்டல் கருத்தரங்கு

Niroshini   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

இவ்வருடம் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சித்திரப்பாட பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி  சித்திரப்பாடத்துக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு, அண்மையில் புத்தளம் ஆசிரியர் பயிற்சி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

புத்தளம் கல்வி வலய தமிழ் மொழி பிரிவு பாடசாலைகளில் சித்திர பாடத்தில் க.பொ.த. சாதாரண தர பரீட்சை அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் நோக்கில் இலவச இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சித்திர பாடத்தில் பின்னடைவில் உள்ள மாணவர்களை உற்சாகப்படுத்தி முன்னேற்றுவதும் சகல மாணவர்களும் சித்தி அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடும் புத்தளம் கல்வி வலயத்தின் தமிழ் பிரிவினால் இந்த இலவச கருத்தரங்கு நடாத்தப்பட்டது.

புத்தளம் வடக்கு கோட்ட மட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலம் பரீட்சை எழுதவுள்ள ஐந்து பாடசாலைகளின் மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

தமிழ் பிரிவு சித்திரப்பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகர் எம்.எம். மொஹம்மத் இந்த கருத்தரங்கில் வளவாளராக கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .