2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒட்டிசம் விழிப்புணர்வு பிரசாரம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 25 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் (CDB) நிறுவனம், இலங்கை சிறுவர் அபிவிருத்தி சங்கத்துடன் (SLACD) இணைந்து, ஒட்டிசம் குறைபாட்டினால் பாதிப்புக்குள்ளானப் பிள்ளைகளின் நோய்த் தீவிரத்தன்மையைக் குறைத்து, ஆரம்பத்திலேயே குறைபாட்டினைக் கண்டறிந்து கவனம் செலுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய அளவில் மதியிறுக்க நோய் விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளது.

இந்த ஒட்டிசம் விழிப்புணர்வு பிரசாரமானது (CDB) இன் முதன்மையான சமூகப்பொறுப்புணர்வுத்திட்டமாக இருப்பதுடன், (SLACD) உடன் இணைந்து (CDB) கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் நீடித்த தன்மையை உறுதி செய்யும் வகையில் மதியிறுக்க நோய் நம்பிக்கை நிதியத்தின் அங்குரார்ப்பணமும் இப்பிரசாரத்துக்கு மேலும் பெறுமதி சேர்ப்பதாக அமைந்திரு ந்தது.   

ஒட்டிசம் குறைபாட்டின் சிக்கல் தன்மை மற்றும் பாதிப்புக்குள்ளானப் பிள்ளைகள் முகம் கொடுக்கும் சவால்கள் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர். பாலித மஹிபால கருத்துத் தெரிவிக்கையில், “ஒட்டிசம் குறைபாட்டினால் பாதிப்புக்குள்ளான ஒவ்வொரு பிள்ளையையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சைகளை வழங்க வேண்டியமை மிக முக்கியமாகும்” என்றார்.

“ஒட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் தொடர்பாடல் மற்றும் நடத்தை விருத்தியில் தாமதம் ஏற்படுவதுடன், பெண் பிள்ளைகளைக் காட்டிலும் 93இல் 1 ஆண் பிள்ளைகள் இக்குறைபாட்டினால் பாதிக்கப்படுவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன” என ஆலோசகரும், சிறுவர் உளநோய் பேராசிரியருமான ஹேமமாலி பெரேரா தெரிவித்ததுடன், “இத்தகைய பிள்ளைகளின் வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டார். இரண்டு வயதை எய்த முன்னரே குழந்தை இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தால் குழந்தையின் அறிவாற்றல், நடத்தை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி போன்றவற்றை மேம்படுத்தி நேர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.   

இந்த ஒட்டிசம் விழிப்புணர்வு பிரசாரத்தைத் தங்களது முதன்மை CSR திட்டமாக உருவாக்கியதன் காரணத்தை விளக்கிய CDB இன் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹேஷ் நாணயக்கார, “நரம்பியல் விருத்தியில் ஏற்படும் சிக்கலான இந்தக் குறைபாடானது பிறப்பின் போதே உருவாவதுடன், பிள்ளை வளரும்போதே அதன் சமூக உறவு மற்றும் மொழி விருத்தி தாமதமடைந்து குணங்குறிகள் தெளிவாகப் புலப்பட ஆரம்பிக்கும்.

எனவே தான், ஆரம்பத்திலேயே பிள்ளையின் குறைப்பாட்டினைக் கண்டறிவதில் பெற்றோர் முக்கிய பங்கு வகிப்பதுடன், உரிய காலத்தில் மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்படுதல் வேண்டும். இருப்பினும், இந்நிலைமையானது இலங்கையைப் பொறுத்தமட்டில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வின்மைக் காரணமாக பின்தங்கிய நிலைமையிலேயே காணப்படுகிறது”என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .