2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பிலியந்தளை SOS சிறுவர் கிராமத்தில் Glitz கொண்டாட்டம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 25 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை சிறுவர் தினம் பிலியந்தளை SOS சிறுவர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் குதூகலம் மிகுந்ததாக அமைந்திருந்தது. இச்சிறுவர் தினத்தன்று நவநாகரிகத்தின் உறைவிடமான Glitz, பிலியந்தளை SOS கிராமத்திலுள்ள அனைத்து சிறுவர்களுக்குமான பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்திருந்தது.   

Soapy கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறுவர் குழுக்களின் மகிழ்ச்சியான சிரிப்பொலியும் சந்தோஷமும் அக்கிராமம் எங்கும் நிறைந்திருந்தது. சிறிய வயதினருக்கு bouncy castle மற்றும் மெஜிக் ஷோ என்பனவற்றுடன் சிறு விளையாட்டுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

Glitz ஊழியர்களும் இந்நிகழ்வுகளில் மகிழ்வுடன் பங்கேற்றதுடன் சிறுவர்களின் பாதுகாப்புத் தொடர்பாகவும் கவனமாக இருந்தனர். இந்நாளை நிறைவுசெய்யும் முகமாக சிறுவர்கள் கண்டுகளிக்க வானவேடிக்கைகளும் இடம்பெற்றன.   

SOS கிராமத்துடன் நீடித்த தொடர்பை Glitz பேணி வருவதுடன் 2016ஆம் ஆண்டின் சிறுவர் தினத்தை இச்சிறுவர்களுடன் கொண்டாட கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். நாம் எப்போதும் எமது பங்குதாரர்களுடன் நீடித்த உறவைப் பேணி வருவதுடன் இந்த உறவு எமது சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளிலும் வெளிப்படுகின்றது. எமது சிறுவர்களே எமது தேசத்தின் எதிர்கால நம்பிக்கை, எனவே சமுதாயத்தில் பின்தங்கியுள்ள சிறுவர்களை ஆதரித்து வரும் நிறுவனங்களை அடையாளம் கண்டு உதவுவது மிக முக்கியம் ஆகும்” என Glitzஇன் சந்தைப்படுத்தல் முகாமையாளரான ரனீஸ் ஷெரீப் தெரிவித்தார்.   

2013 முதல் 18 சிறுவர்கள் அடங்கிய 2 SOS குடும்பங்களுக்குத் தமது ஆதரவை வழங்கி வரும்  Glitz இத்தருணத்தில் SOS உடனான தமது ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொண்டது. மேலும் பிலியந்தளை SOS கிராமத்துக்கு ரூ.100,000 பெறுமதியான மேலதிக நன்கொடையையும் வழங்கியது.   

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த Glitzஇன் துனை சந்தைப்படுத்தல் முகாமையாளர் அகாம் வஹாப்டீன் “ Glitz குழு சிறுவர்களுடன் இணைந்து விளையாட்டுக்களில் ஈடுபடும்போது சிறுவர்களின் முகங்களில் ஏற்பட்ட மகிழ்ச்சி எமக்கு கிடைத்த மாபெரும் வெகுமதி” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X