2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

SDB வங்கியிடமிருந்து சிறுவர்களுக்கு பல்வேறு அனுகூலங்கள்

Gavitha   / 2016 ஒக்டோபர் 25 , பி.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசத்தின் அபிவிருத்திக்குப் பங்களிப்பை வழங்கும் வகையில் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்ற சணச அபிவிருத்தி (SDB) வங்கி, சர்வதேச சிறுவர் தினத்துக்கு வெவ்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. உலகின் எதிர்காலத்தைத் தமது கைகளில் பொறுப்பெடுக்கவுள்ள இளம் தலைமுறையினருக்கான இனங்காணல் அங்கிகாரமாக, ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 1ஆம்

திகதியன்று இலங்கையிலும் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுன்கிறது. சிறுபிராயத்தின் நற்பயன்களை உண்மையாக அனுபவிப்பதற்கு, சிறுவர்களைத் தமது சிறுபிராயத்திலிருந்தே சுதந்திரமாக நேரத்தைச் செலவிட அனுமதிக்க வேண்டும்.

அத்துடன் அவர்களது ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதும் அத்தியாவசியமாக உள்ளதுடன், எதிர்காலத்தில் மிகுந்தப் போட்டித்திறன் கொண்ட உலகிற்கு அவர்கள் முகங்கொடுப்பதற்கு அவர்களைத் தயார்படுத்தும் கல்வியையும் அவர்களுக்கு வழங்கவும் வேண்டும். அவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை வளர்ப்பதும் மிகவும் முக்கியமானது. SDB வங்கி வழங்கும் லக்தரு சிறுவர் சேமிப்புக் கணக்கு, அந்த தேவைகள் அனைத்தையும் ஈடுசெய்யும் வகையில் விசேடமாக வடிமைக்கப்பட்டுள்ளது.   

லக்தரு கணக்குகளைக் கொண்டுள்ள சிறுவர்களுக்குப் பல்வேறுபட்ட பரிசுகள் மற்றும் புலமைப்பரிசில் திட்டங்களை வழங்கும் ஏற்பாடுகளை SDB வங்கி மேற்கொண்டுள்ளது. இந்த சிறுவர் கணக்குகள் மூலமாகக் கிடைக்கப்பெறுகின்ற தனித்துவமான நற்பயன்கள் சில வருமாறு சாதாரண சேமிப்புக் கணக்குகளுக்கு கிடைக்கும் வட்டியை விடவும் 1% அதிக வட்டி, கணக்கிலுள்ள மீதியின் அடிப்படையில் கவர்ச்சியான பரிசுகள், தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை அல்லது கபொத (சா/த) மற்றும் கபொத (உ/த) பரிட்சைகளில் சிறந்தப் பெறுபேறுகளை ஈட்டும் மாணவர்களுக்கு ரூ 50,000 வரையிலான பரிசுகள் மற்றும் ஒரு மாதத்துக் குறைந்தபட்ச மீதியாக ரூ. 10,000 தொகையைப் பேணுகின்ற வாடிக்கையாளர்களுக்கு                                        ரூ. 50,000 பெறுமதியான மருத்துவக் காப்புறுதி. இத்திட்டத்தின் கீழ் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்படும் சமயத்தில் தினசரி ரூ. 5,000 கொடுப்பனவும், அரசாங்க வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்படும் போது ரூ. 3,500 கொடுப்பனவும் வழங்கப்படும்.   

இலங்கை நுகர்வோருக்கு நிதியியல் சேவைகளை வழங்குவதில் நீண்ட கால அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ள ஒரு வங்கியாக SDB வங்கி திகழ்கிறது. பாரம்பரியமான வங்கித்துறையில் நிதியியல் சேவைகளின் பயன்களை அனுபவிப்பதற்கு கஷ்டப்படுகின்ற, குறிப்பாக கிராமப்புறங்களிலுள்ள மக்களுக்கு நுண்-கடன் வசதிகள் போன்ற சேவைகளை வழங்கி, நாட்டின் வங்கித்துறையில் புதியதொரு பரிமாணத்தை அறிமுகப்படுத்துவதில் SDB  வங்கி வெற்றி கண்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .