2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

“தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க சக்தி அவசியம்”

Kogilavani   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ்

தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க சக்தி மிகவும் அவசியமானது. இதனை கருத்திற்கொண்டு, லிந்துலையின் அகரகந்தை மற்றும் பெஸிபன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், இலங்கை தொழிலாளர் சங்கத்துக்கான அங்கத்தினர் சந்தாவை நிறுத்தப் போவதில்லை என உறுதிபூண்டுள்ளதாக, அச்சங்கத்தின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் முத்தையா சிவஞானம் தெரிவித்தார்.  

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,   

“அரசாங்கம் மற்றும் தனியார் ஊழியர்களின் தொழில் உரிமை பிணக்குகளுக்கு நடவடிக்கைகளை எடுப்பதற்காக, தொழிற்சங்கங்கள் எவ்வாறு செயற்படுகின்றனவோ, அதேபோன்று, தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கப் பிணக்குகளைத் தீர்ப்பதற்காக, பல தொழிற்சங்கங்கள் செயற்படுகின்றன.  

இந்நிலையில், தோட்ட நிர்வாகங்களின் ஊடாக, தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய தொழில் பிணக்குகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் அநீதிகளை தட்டிக்கேட்க, தொழிற்சங்க சக்தி தேவைப்படுகின்றது.  

தோட்டத் தொழிலாளர்களுக்காக சில தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தமையால், தோட்ட நிர்வாகிகளினூடாக தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பிணக்குகளுக்கு தீர்வு கிடைக்கப்பெற்றது. தொழிற்சங்கம் என்பது, சம்பள உயர்வைபெற்றுக்கொடுக்கும் அமைப்பல்ல. தனிமனிதரால் சாதிக்க முடியாத தொழில் பிரச்சினையை சாதிக்கக்கூடிய பலம்,  தொழிற்சங்கத்துக்கு மாத்திரமே உண்டு.  

இந்த நிலையை உணர்ந்தே,இ.தொ.சங்கத்தின் அங்கத்தினர்கள், தமக்கு தோட்ட நிர்வாகத்தினால் பிடித்து அனுப்பப்படும் சந்தாவை நிறுத்தாது தொடர்ந்தும் வழங்கத் தீர்மானித்துள்ளதாக, உறுதிபூண்டுள்ளனர்.   

தொழிற்சங்கங்களுக்கு வழங்கும் சந்தாவை நிறுத்தி, தொழிற்சங்க உரிமையை இழந்து, தோட்ட நிர்வாகிகளின் அடிமைப்போக்குக்கு செல்ல நாம் தயாராக இல்லை என்பதை நன்கு உணர்ந்தே, இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளோம்” என அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .