2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

Smartwatch விற்பனையில் பாரிய வீழ்ச்சி

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 26 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தை ஆய்வாளர்கள் நிறுவனமான IDC-இனால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையின்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், Smartwatch விற்பனையானது, 51.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Smartwatch சந்தையில், Apple Watch முதலிடத்தில் உள்ளபோதும், இவ்வாண்டின் ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், ஒரு மில்லியனுக்கு சற்று அதிகமான Apple Watchகளே விற்பனையாகியுள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில், 3.9 மில்லியன் கணக்கான Apple Watchகள் விற்பனையாகியிருந்தன. இது, 71.6 சதவீதமான வீழ்ச்சி ஆகும்.

முன்னணி Smartwatchகளில், Garmin மட்டுமே வளர்ச்சியைக் காட்டியிருந்தபோதும், அதன் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டில், 0.6 மில்லியன் Garmin Smartwatchகள் விற்பனையாகியிருந்தன. கடந்ததாண்டின் இதே காலப்பகுதியில், 0.1 மில்லியன் திறன்பேசிகளே விற்பனையாகியிருந்தன.

சம்சுங், 2015 மாற்றும் 2016ஆம் ஆண்டுகளில், 0.4 மில்லியன் Gear, Gear 2 Smartwatchகளை விற்றிருந்தது. இதேவேளை, Motorolaவின் Moto 360ஐ தயாரிக்கும் Lenovoவே, மிகப் பெரிய வீழ்ச்சியாக, 73.3 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது.   

குறித்த காலாண்டிலேயே புதிய பதிப்பு Smartwatchகள் வெளியாகியிருந்தபோதும், Smartwatch விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை, Smartwatchகள் தொடர்பிலான நுகர்வோரின் ஆர்வம் குறைவாக உள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

அப்பிள், தனது புதிய பதிப்பை, ஆடம்பரமான பதிப்பாக முன்னிறுத்தாது, உடற்கூற்று சாதனமாகவே முன்னிலைப்படுத்தியது. இது தவிர, கடந்த மாதம், 10,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக இருந்த தங்கப் பதிப்பையும் நிறுத்தியிருந்தது. அப்பிளின் புதிய பதிப்பின் மூலம் நீச்சல் செயற்பாடுகளை கண்காணிக்க முடியும். உடற்கூற்று நிறுவனமான Nike-இன் இணைப்பிலான சிறப்புப் பதிப்பு, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (28) விற்பனைக்கு வரவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .