2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கல்விக்கூடாக எமது சமூகத்தை வளர்த்து வர வேண்டும்

Niroshini   / 2016 ஒக்டோபர் 26 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மூன்று தசாப்தமாக அழிக்கப்பட்ட, ஒழிக்கப்பட்ட, காணாமல் செய்யப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதிகள் தமிழர்கள். இந்த தேசத்தில் நாங்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமானால், கல்விக்கூடாக எமது சமூகத்தை வளர்த்து வர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
 
செங்கலடி - அக்னி இசைக்குழுவின் ஏற்பாட்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை(24) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“தற்போது நாட்டில் நடைபெறும் நல்லாட்சியில் அனைவருக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் அதிகரிப்பது நல்லது. ஆனால், இந்த சுதந்திரத்தின் மூலம் கலாசார சீரழிவுகள் போதைப்பொருள் பாவனை, அநாகரிகமான நடத்தைகளில் மூழ்கி எம்மை அழித்துக் கொள்ளக்கூடாது. சுதந்திரமும் ஜனநாயகமும் இன்னும் இன்னும் எங்களை வளப்படுத்துவதாக இருக்க வேண்டும். பின்னடைவுக்கும் வீழ்ச்சிக்கும் கொண்டுசெல்லக்கூடாது.

இந்த நாட்டிலே மூன்றாம் குடியரசு யாப்பு வரையப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த அரசிலமைப்பு மாற்றத்திலே நாங்கள் சிறந்த தீர்வுத் திட்டத்தை வேண்டி நிற்கின்றோம். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ் தலைமைத்துவங்கள் மிக நிதானமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
 
இந்த நாட்டில் இனவாதத்தை விரும்பாத பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை மக்களுடன் இணைந்து அரசியல் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளனர். இந்த ஆட்சியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
 
ஒரு தீர்வுத் திட்டத்தை நோக்கி செல்லும்போது குழப்புவதற்கு இனவாத மற்றும் மதவாத அமைப்புகள்  வேகமாக செயற்படுகின்றன. தற்போதைய  சந்தர்ப்பத்தை மிக நிதானமாக கையாளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
 
சிறுவர்கள் மனநிலை ரீதியாக பாதிக்கப்பட்டுவார்கள் என்ற பல்வேறு கருத்துக்கள் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் தற்போது வந்துகொண்டிருகின்றன. ஆனால் வெட்டுப்புள்ளிக்கு கீழ் புள்ளிகளைப் பெற்ற பிள்ளைகளை தண்டிப்பது பிழையான செயலாகும். அவர்களை அடுத்த பரீட்சைக்கு தயார்படுத்த வேண்டும்.
 
க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் இறுக்கு முதல் மாவட்டம் யாழ்ப்பாணம் அதற்கு முன்பு மட்டக்களப்பு இருக்கின்றது. 1980ஆம் ஆண்டுகளில் யாழ். மாவட்டத்தில் 300 மாணவர்கள் அதிவிஷேட சித்திபெற்று பல்கலைக்கழகம் சென்றார்கள். 2016ஆம் ஆண்டில் 500 மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றார்கள். கல்வி அங்கு பின்னடையவில்லை வீழ்ச்சியடைந்துள்ளது. அசாதாரண சூழ்நிலையில் போது கல்வி மீது இருந்த அக்கறை சமாதான சூழ்நிலையில் குறைவடைந்துள்ளது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில விபசார விடுதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளன. வீதிக்கு வீதி சிகை அலங்கார அழகுபடுத்தும் நிலையங்கள் என நாகரீக மோகத்தினால் இளம் சமூகம் சீரழிந்துகொண்டிருக்கின்றன. எமது மாவட்டம்  மதுபாவனையில் தற்போது இரண்டாம் இடத்துக்குச் சென்றுள்ளது. முதலிடத்தை இன்னுமொரு தமிழ் மாவட்டம் பெற்றுள்ளது. 8ஆம் தரம் படிக்கும் மாணவன் மதுபோதையுடன் பாடசாலைக்குச் செல்கிறான். இதை எத்தனை பெற்றோர் கவனத்தில்கொள்கிறீர்கள். எமது எதிர்கால சமூகம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .