'அக்கினியாய் வெளியே வா'
27-10-2016 10:25 AM
Comments - 0       Views - 18

இராகலை தயானியின் 'அக்கினியாய்  வெளியே வா' கவிதைத் தொகுதி வெளியீடு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (23)    காலை, இராகலை தமிழ் மகா வித்தியாலய பாரதி மண்டபத்தில்  நடைபெற்றது.

புரவலர் புத்தகப் பூங்காவின் 37ஆவது வெளியீடாக வெளிவந்துள்ள இக்கவிதை தொகுதிக்கு, வாழ்த்துரைகளை ஆசிரியரும் கவிஞருமான இராகலை பன்னீரும்  எழுத்தாளரும் விரிவுரையாளருமான மை.பன்னீர்செல்வமும் வழங்கினர்.

சிறப்புரைகளை கவிஞர் மேமன்கவி  மற்றும் தமிழ்நாடு வளரி கவிதை இதழ் ஆசிரியர் அருணாசுந்தரராசன் ஆகியோர் வழங்கினர்.
ஒய்வுநிலை உதவி கல்விப் பணிப்பாளர் பீ.மரியதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  புரவலர் புத்தகப் பூங்கா நிறுவனர் இலக்கியப் புரவலர் ஹாஸிம்; ஒமர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

" 'அக்கினியாய் வெளியே வா'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty