கண்காட்சியும் நூல் வெளியீடும்
27-10-2016 10:29 AM
Comments - 0       Views - 19

காயத்திரி விக்கினேஸ்வரன்

யாழ்.வலயக்கல்வி அலுவலகத்தின் முறைசாரக் கல்விப் பிரிவின் கண்காட்சியும் நூல் வெளியீடும்  யாழ்.இந்து மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.

யாழ்.வலயக்கல்விப் பணிப்பாளர் ந.தெய்வேந்திரராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சண்முககுமார், சிறப்பு விருந்தினராக யாழ் கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.மாணிக்கராசா, யாழ் கல்வி முகாமைத்துவ பிரதிக்கல்விப் பணிப்பாளர் அ.அகிலதாஸ், யாழ்.இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி மி.விமலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் 'முதற்படி' எனும் நூல் வெளியிடப்பட்டது. நூலை பிரதம விருந்தினர் வெளியிட்டு வைத்தார்.

அத்துடன் முறைசாரா கல்விப் பிரிவில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்களின் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன.

" கண்காட்சியும் நூல் வெளியீடும்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty