2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

சுகாதாரத்துறைக்கான கட்டடங்களை அமைக்க காணிகள் பற்றாக்குறை

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,றியாஸ் ஆதம்

சுகாதாரத்துறைக்குப் போதிய நிதி உதவி கிடைக்கின்றபோதிலும், அந்நிதியைக் கொண்டு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் சுகாதாரத்துறைக்கான கட்டடங்களை அமைத்து அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கக் காணிகள் இன்மையால் பாரிய சவாலை எதிர்நோக்குவதாக அப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் மத்திய சுகாதார நிலையமும் பற்சிகிச்சை நிலையமும் 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளது. இவற்றுக்கான கட்டடங்களை அமைப்பதற்காக சுமார் 40 இலட்சம் ரூபாய் மெறுமதியான காணியை  நன்கொடையாகக் கையளிக்கும் நிகழ்வு, புதன்கிழமை (26) இரவு நடைபெற்றது.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் 13 பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் இயங்குகின்றன. இவற்றில் 02  பிரதேசங்களுக்கு மட்டும் நிரந்தரமான காரியாலயங்கள் இல்லாமல் உள்ளதுடன், இவற்றைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கான நிரந்தரக் கட்டடம் இல்லாத 02 பிரதேசங்களில் ஒன்றான அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் 17 மில்லியன்; ரூபாய் செலவில் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் உட்கட்டுமான வேலைக்கு 03 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்முனைத் தெற்குப் பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கான நிரந்தரக் கட்டடம் அமைப்பதற்காக காணி கிடைத்துள்ள நிலையில், அக்காணியில் விரைவில் காரியாலயக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது.  
 மேலும், பொத்துவில் பிரதேசத்தில் 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட வைத்தியசாலையை விரைவில் திறந்துவைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .