மூளாய் இந்து இளைஞர்களின் வாணி விழா
27-10-2016 10:37 AM
Comments - 0       Views - 22

எஸ்.குகன்

மூளாய் இந்து இளைஞர் ஏற்பாடு செய்த வாணி விழா, மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலயத்தின் அருகிலுள்ள பிரசாத் கலையரங்கில், கு.கௌரிசங்கர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவக் கற்கைகள் பீடப் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி தம்பதியார் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் இ.ச.பே.நாகரத்தினம், மூளாய் அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் இ.லோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பிரதேச கலைஞர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

சிறப்பு நிகழ்வாக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசன் தலைமையில் 'இன்றைய இளையோரிடம் ஆன்மீக நாட்டம் வளர்ச்சியுறுகின்றதா? அல்லது தளர்ச்சியுறுகின்றதா?' என்ற பொருளில் பட்டிமண்டபம் இடம்பெற்றது.

'வளர்ச்சியுறுகின்றது' என்ற அணியில் நீர்ப்பாசன அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.ஐங்கரன், சமூகசேவை உத்தியோகத்தர் வே.சிவராஜா ஆகியோரும், 'தளர்ச்சியுறுகின்றது' என்ற அணியில் காணி அபிவிருத்தி உத்தியோகத்தர் நா.ஞானலோஜன், யாழ்.பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா ஆகியோரும் வாதிட்டனர்.

"மூளாய் இந்து இளைஞர்களின் வாணி விழா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty