2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி

George   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் கடந்த 21ஆம் திகதி அதிகாலை சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு, வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (27) அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு (64 ஆவது அமர்வு) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற போது, இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது.

அனைத்து உறுப்பினர்களும் எழுந்து சபையின் நடுப்பகுதிக்கு வந்து இந்த அஞ்சலியைச் செலுத்தினர்.

கடந்த 21ஆம் திகதி அதிகாலை கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .