2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வடமாகாணசபையின் புதிய பிரதி அவைத்தலைவர் தெரிவு

George   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணசபையின் புதிய  பிரதி அவைத்தலைவராக கே.வி.கமலேஸ்வரன், வாக்கெடுப்பு ஊடாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வட மாகாண சபையின் முதலாவது  பிரதித் அவைத்தலைவராக (பிரதித் தவிசாளர்) பதவி வகித்த அன்டனி ஜெயநாதன், கடந்த மாதம் விபத்தில் உயிரிழந்தார்.

அவரது மறைவையடுத்து, வடமாகாண சபையின் பிரதித் அவைத்தலைவர் பதவி ​வெற்றிடமாகியது.

அதனையடுத்து, வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று  வியாழக்கிழமை (27) ஆரம்பமாகி நடைபெற்ற போது, புதிய பிரதி அவைத்தலைவராக கே.வி.கமலேஸ்வரன், தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X