2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'கிழக்குக்கான தேசிய ஆசிரிய இடமாற்றக் கொள்கை சமர்ப்பிக்கப்படும்'

Thipaan   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

கிழக்கு மாகாணத்துக்கான தேசிய ஆசிரிய இடமாற்றக்கொள்கையை, அடுத்த மாகாண சபை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற 65ஆவது மாகாண சபை அமர்வில், சபை உறுப்பினர் கே. கருணாகரன் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணைக்குப் பதிலளிக்கும் போதே மேற்படி விடயத்தை குறிப்பிட்டார்.

'தேசிய இடமாற்றக்கொள்ளையை வைத்துக்கொண்டு, கிழக்கு மாகாணத்துக்;கான தேசிய ஆசிரிய இடமாற்றக்கொள்கை ஒன்று தயாரிக்கப்பட்டு, சில திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 

பெரும்பாலும், வரும் அமைச்சரவையில் இந்த இடமாற்றக்கொள்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். எதிர்காலத்தில் இதற்கமையவே இடமாற்றங்கள் செய்யப்படும்.

நவம்பர் 5ஆம் திகதிக்குள், கல்வியற்கல்லூரி உட்பட்ட பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும். 50 சிங்கள மொழி மூல ஆசிரியர்கள் உட்பட 450 ஆசிரியர்கள் இவ்வாறு நியமிக்கப்படவுள்ளனர். குறிப்பாக, பாராபட்சமின்றி மிகவும் பின்தங்கிய அவசியமான இடங்களுக்கும் இந்நியமனங்கள் செய்யப்படவுள்ளன.

இவ்வாறே சிற்றூழியர்கள், நிர்வாக அதிகாரிகளுக்கான இடமாற்றங்கள் இடம்பெறுவதில்லை என பலரும் இங்கு சுட்டிக்காட்டினீர்கள். அவற்றுக்கான நடவடிக்கைள் வரும் ஆண்டில் இருந்து

மேற்கொள்ளப்படும். ஆசிரிய இடமாற்றங்களைப்போன்று, இந்த இடமாற்றமும் இடம்பெறும்' எனவும் அவர் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .