2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கையில் அனந்தாராவின் 2ஆவது சொகுசு ஹொட்டல்

Gavitha   / 2016 ஒக்டோபர் 27 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மைனர் ஹொட்டல்ஸ் நிறுவனத்துடன் பங்காளித்துவ அடிப்படையில் ஒன்றிணைந்துள்ள ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், இலங்கையில் இரண்டாவது “அனந்தாரா” (Anantara) ஹொட்டலை திறந்து வைப்பதாக அறிவித்துள்ளது.

இப்புதிய “அனந்தாரா களுத்துறை றிசோர்ட்”ஆனது 141 அதிதிகள் அறைகள், அறைத்தொகுதிகள் (Suites) மற்றும் நீச்சல் தடாக ஓரத்திலான மனைகளை (Pool Villas) தன்னகத்தே கொண்டுள்ளது. களுத்துறையில் இந்து சமுத்திரத்துக்கும் களுகங்கைக்கும் இடையில் இந்த ஹொட்டல் அமைந்துள்ளதுடன், கரையோரம், ஆறு மற்றும் களப்பு ஆகியவற்றை முன்னோக்கியதாக அமைந்துள்ளது.   

இந்த ஹொட்டல் தொகுதி மறைந்த ஜெப்ரி பாவாவினால் ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்டது. வெப்பமண்டலத் தோட்டங்கள், தென்னை மரங்கள் மற்றும் கடற்கரை ஆகியவற்றினால் சூழப்பட்டதாக இது அமைந்துள்ளது.  

அனைத்து அதிதிகள் அறைகளும் ஒரு வைன் பதனப்பெட்டி வசதியைக் கொண்டிருப்பதுடன், ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாகவும் காணப்படுகின்றது. அத்தோடு, ஊனமுற்றோருக்கான அறைகள் மற்றும் நீச்சல்தடாக ஓரத்திலான அதிதிகள் அறைகள் போன்றவையும் உள்ளன. நேர்த்தியான ஓய்வறைக்கு ஒருபக்கமாக அறைத்தொகுதிகள் அமையப் பெற்றுள்ளதுடன், ஒரு படுக்கையறையைக் கொண்ட அதிசொகுசு மனைத்தொகுதியானது பிரத்தியேகமான நீர்விழும் தடாகம் மற்றும் திறந்த ஓய்வு கூடத்தையும் கொண்டுள்ளது.

அறைத்தொகுதிகள் மற்றும் நீச்சல் தடாக மனைகளில் (வில்லாக்களில்) தங்கியிருக்கும் அதிதிகள் “போஸ் புளுடூத்” ஒலிபெருக்கி மூலம் இசையைக் கேட்டு மகிழ முடியும் என்பதுடன், இது தொடர்பாக முன்வைக்கப்படும் விஷேட கோரிக்கைகள் Villa Host இனால் பொறுப்பேற்று மேற்கொள்ளப்படும்.ஒன்று மற்றும் இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட வில்லாக்களோடு இணைந்ததாகப் பூந்தோட்ட மேற்தளம் ஒன்று காணப்படுகின்றது. குடும்பம் மற்றும் நண்பர்களுடன் விடுமுறைகளைக் கழிப்பவர்களுக்காக, ஒரு படுக்கையறையைக் கொண்ட நீச்சல் தடாக ஓரத்திலான மனைகள் ஒன்றுக்கொன்று இடைத்தொடர்புபட்ட பூந்தோட்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .