2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சிலோன் டொபாக்கோ அணிக்கு கௌரவிப்பு

Gavitha   / 2016 ஒக்டோபர் 27 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்தினால் ஏற்பாடு செய்யப்படும், வருடாந்த தேசிய விற்பனை காங்கிரஸ் விருதுகள் (NASCO) 2016இல் சிலோன் டொபாக்கோ கம்பனி நான்கு விருதுகளை தனதாக்கியிருந்தது.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில், தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக சிலோன் டொபாக்கோ கம்பனி விருதுகளைத் தனதாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

NASCO விருதுகள் வழங்கும் நிகழ்வில், மதுபானம் மற்றும் புகையிலை பிரிவில் வன்னிநாயக்க, நிஷங்க திஸாநாயக்க மற்றும் சிரான் டயஸ் ஆகியோர் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளை தமதாக்கியிருந்தனர். சிறந்த நிறைவேற்று அதிகாரி பிரிவில் வெள்ளி விருதை வன்னிநாயக்க தனதாக்கியிருந்தார்.   

சிலோன் டொபாக்கோ கம்பனியின் பிரதம முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான, மைக்கல் கொயெஸ்ட் கருத்துத் தெரிவிக்கையில், “எமது வியாபாரத்தின் முதுகெலும்பாக எமது மக்களை நாம் கருதுகிறோம். இதன் காரணமாக, உள்ளகத் திறமைகள், புத்தாக்கம் மற்றும் புதுவிதமான சிந்தனைகள் ஆகியவற்றை நாம் கௌரவித்து வருகிறோம்.

தொடர்ச்சியான செயற்பாடுகள் மூலமாக, அவர்களின் நிபுணத்துவம் மேம்படுத்தப்படுகிறது. இவ்வாறாகத் தம்மை திறம்பட செயற்படக்கூடியவகையில் நிஷங்க மற்றும் சிரான் ஆகியோர் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்” என்றார். SLIM NASCO விருதுகள் என்பது, நாடு முழுவதையும் சேர்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் விற்பனை அதிகாரிகளின் திறமைகளை கௌரவிக்கும் வகையில், முன்னெடுக்கப்படும் செயற்பாடாக அமைந்துள்ளது.

நாடு முழுவதையும் சேர்ந்த விற்பனை அதிகாரிகளின் செயற்பாடுகளை ஊக்குவித்து, கௌரவித்து அவர்களில் காணப்படும் விற்பனை அதிகாரிக்கான திறமையை மேலும் மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. விற்பனை தொடர்பான பயிலல்களை ஊக்குவிப்பதுடன், நாட்டின் பிரகாசமானதும் சிறந்த விற்பனை தொழிலையும் காண்பித்துள்ளது.   

நிறுவனத்தின் இலக்குகளை எய்துவது, என்பதைப்பொறுத்து விருதுகள் வழங்கலுக்காகத் தெரிவு இடம்பெற்றிருந்தது. மாபெரும் பொறுப்புகளை ஏற்கக்கூடிய தன்மை மற்றும் புத்தாக்கமான செயற்பாடுகளைப் பொறுத்தும் விருதுகளுக்கான தெரிவு இடம்பெறுகிறது.   

கொயெஸ்ட் மேலும் தெரிவிக்கையில், “விருதுகளை வென்றவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கையின் நிறுவனங்களில் உயர்ந்த ஸ்தானத்தில் நாம் திகழ்வதற்கு அவர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானது” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X