2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

“ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அபிவிருத்தியடையும்“

Kogilavani   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

“ஊவா மாகாணக் கல்வியமைச்சில் தமிழ்க் கல்விப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு ஆறு மாதங்களே ஆகின்றன. இந்த குறுகிய காலத்தில், கல்விசார் வேலைத்திட்டங்களை ஒரேடியாகச் செய்து முடிக்க முடியாது. படிப்படியாகவே முன்னெடுக்க முடியும்” என்றுத் தெரிவித்த ஊவா மாகாணசபை உறுப்பினரும் தமிழ்க் கல்விப் பிரிவின் பொறுப்பாளருமான ஆறுமுகம் கணேசமூர்த்தி, ஊவா மாகாணத்தின் தமிழ்க்கல்வி மேம்பாடுகளுக்காக ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.   

ஊவா மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரட்ணவின் கருத்துக்கு பதிலளித்து உரையாற்றுபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,   
“கிழக்கு மாகாணத்திலிருந்து க.பொ.த உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியப்  பாடங்களைக் கற்பிக்க, ஆசிரியர்கள் வரத் தயாராக இல்லை.  தற்போது பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியின் விஞ்ஞான பிரிவில் 6 மாணவர்களும் கணிதப் பிரிவில் 14 மாணவர்களும் கற்று வருகின்றனர்.   ஹாலிஎல விஞ்ஞானக் கல்லூரியில் விஞ்ஞான ஆய்வுகூடம் இருந்த போதிலும், பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியிலிருக்கும் ஆசிரியர்கள் அங்கு செல்ல விரும்புவதில்லை. அதேப்போன்று, ஹாலிஎல விஞ்ஞானக் கல்லூரியிலிருந்து ஆசிரியர்கள் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரிக்கு செல்வதற்கு விரும்புவதில்லை. இதனால், மேற்குறிப்பிட்ட இரு பாடசாலைகளிலும் குறிப்பிட்ட பாடங்களை ஆரம்பிக்க முடியாதுள்ளது.   

எவ்வாறாயினும், ஊவா மாகாண தமிழ்க் கல்வியை மேம்படுத்தவும், க.பொ.த. சாதாரண தரத்தின் பெறுபேற்று அடைவு மட்டத்தை அதிகரிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .