2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கோப் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது

Menaka Mookandi   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

மத்திய வங்கியின் பிணை முறிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அரச பொறுப்பு முயற்சிகள் தொடர்பிலான தெரிவுக்குழுவின் (கோப்) அறிக்கை, நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

54 பக்கங்கள் மற்றும் சுமார் 2000 பக்கங்களைக் கொண்ட இணைப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

26பேர் கொண்ட இந்தக் கோப் குழுவின் இறுதி அறிக்கையில், அடிக்குறிப்புகளுடன் கூடிய அறிக்கைக்கு, 16பேர் ​கையொப்பமிட்டுள்ளனர்.

அடிக்குறிப்பு இல்லாத அறிக்கைக்கு 9பேர் கைச்சாத்திட்டுள்ளனர். இக்குழுவின் உறுப்பினராக ரஞ்சன் ராமநாயக்க, இரண்டிலும் கைச்சாத்திடவில்லை

எனினும், கோப் குழுவி வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு, கோப் குழுவின் சகல உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மத்திய வங்கியில், 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் வரை, பிணை முறிகள் விநியோகத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலேயே, கோப் குழு விசாரித்தது.

“இரண்டு நாட்கள் கண்விழித்தே, இந்த இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதற்காக அர்ப்பணித்த சகலருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இது நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X