2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்த வேண்டாம்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்

கிழக்கு மாகாணசபையில் நல்லாட்சி முன்னெடுக்கப்படுவதாகக் கூறிக்கொண்டு அபிவிருத்தி நடவடிக்கையில் பாராபட்சமாக செயற்பட்டு இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்த வேண்டாமென மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

மாகாணசபையின் 65ஆவது அமர்வு, பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது, மாகாணசபை ஊடாகச் செயற்படுத்தப்படும் பின்தங்கிய கிராமங்களின் அபிவிருத்தித் திட்டத்துக்கு பொதுவான கொள்கை அடிப்படையில் கிராமங்களைத் தெரிவுசெய்யும் பொறிமுறையை  உருவாக்கக்கோரும்; தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கையில்; பாராபட்சம் காட்டும் செயற்பாடானது மாகாணத்தில் இனங்களுக்கிடையில் முரண்பாட்டையும்  புரிந்துணர்வின்மையையும் ஏற்படுத்தும். மாகாணத்தில் வாழும் மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அபிவிருத்தித்திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும்.

வறுமைக் கோட்டின் கீழ் மக்கள் வாழும் பின்தங்கிய கிராமங்களை இனங்கண்டு அபிவிருத்தி செய்து அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்குடன் இவ்வருடம் 105 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அபிவிருத்தித்திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிய, பாதிக்கப்பட்ட கிராமங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு, பக்கச்சார்பாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தில் பின்தங்கிய, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களை அடையாளப்படுத்தி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்' என்றார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .