2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மேம்பாலம் அமைக்கப்படாமையால் போக்குவரத்து பாதிப்பு

Kogilavani   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு துணுக்காய் கோட்டைக்கட்டியகுளம் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படாததன் காரணமாக, மழை காலத்தில் போக்குவரத்தில் ஈடுபட முடியாதுள்ளதாக, கோட்டைக்கட்டியகுளம் கிராம அபிவிருத்திச் சங்கம் முல்லைத்தீவு மாவட்டச் செயலர், துணுக்காய் பிரதேச செயலர் ஆகியோருக்கு முறைப்பாடு செய்துள்ளது.

கோட்டைக்கட்டியகுளம் மழை காலத்தில் நிரம்பி வழிந்து வீதியைக் குறுக்கறுத்துப் பாய்கின்ற பகுதியில் தற்போது மேம்பாலம் அமைக்கப்பட வேண்டுமென்பது அவசியமாகின்றது.

நான்கடிக்கு மேல் வீதியில் வெள்ளம் பாய்கின்றபோது, கோட்டைக்கட்டியகுளம் கிராமத்துக்கும் அம்பலப்பெருமாள்குளம் கிராமத்துக்குமான போக்குவரத்துகள் துண்டிக்கப்படுவதுடன் மாணவர்கள் கோட்டைக்கட்டியகுளம் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்படும். அத்துடன் வயல் நிலங்களுக்கு பசளை என்பவற்றை கொண்டுசெல்ல முடியாத நெருக்கடி நிலைமை காணப்படும்.

எனவே, குறித்த பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. துணுக்காய் அக்கராயன் வீதியில்; இப்பாலம் அமைக்கவேண்டியுள்ளது. இந்தப் பாலம் அமைப்பதால் சுமார் 250 குடும்பங்கள் பயன்பெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .