2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

போரதீவுப்பற்றில் அபிவிருத்திகளுக்காக நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 43 மில்லியன் ரூபாயும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடு சார் அபிவிருத்தித்திட்டங்களில் 3.84 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடு சார் அபிவிருத்தித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பான அமைச்சு மற்றும் அரசாங்க அதிபரது அறிவுறுத்தல்களுக்கமைவாக இந்த அபிவிருத்தித்திட்டங்களை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உள்ளூர் வீதிகள், கைத்தறி நிலையம் உள்ளிட்மை சார் வேலைத்திட்டங்களுக்கென 43 மில்லியன் ரூபாய்; ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீடு சார் அபிவிருத்தித்திட்டங்களில் மதத் தலங்கள் திருத்த வேலைகள், பாடசாலை நூலகங்கள் அபிவிருத்தி, பாடசாலைகளுக்கான உபகரணங்கள் வழங்கல், விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல், கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு உபகரணங்கள் தளபாடங்கள் வழங்கல், பாடசாலைகளின் சுற்றுமதில் அமைத்தல், உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் 38 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இவ்வேலைத்திட்டங்களில் பெரும்பாலான வேலைத்திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளதுடன், நிறைவடையாத வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X