2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திருக்கோவில் பிரதான வீதியில் குப்பைகளைக் கொட்டுவோர் மீது வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பட்டைப் பிரதேசம் முதல் தாண்டியடிப் பிரதேசம் வரையான பிரதான வீதியை அண்டியுள்ள குடியிருப்பாளர்களும் வர்த்தக நிலைய உரிமையாளர்களும் தங்களுக்கு உரித்தான பகுதிகளைச் சுத்தமாக வைத்திருக்குமாறு அப்பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜனும் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.பண்டாரவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தங்களுக்கு உரித்தான பகுதிகளை அசுத்தமாக வைத்திருப்போர் மீது நீதிமன்றத்தின் ஊடாக வழக்குத் தாக்கல் செய்யப்படும்;. இந்த நடைமுறை எதிர்வரும் வாரம் முதல் கடைப்பிடிக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர்.

இவ்வாறு வீதிகளில் குப்பைகளைக் கொட்டுவோர் தொடர்பில் திருக்கோவில் பொலிஸ் நிலையம்இ பிரதேச செயலகம்இ பிரதேச சபை ஆகியவற்றுக்கு அறிவிக்க முடியும் எனவும் அவர்கள் கூறினர்.

'சுத்தமாகச் சூழலைப் பேணி சுகமாக வாழ்வோம்' எனும் தொனிப்பொருளில் தம்பட்டைப் பிரதேசம் முதல் தாண்டியடிப் பிரதேசம்வரையான சுமார் 20 கிலோமீற்றர் தூரமுள்ள பிரதான வீதியின் இருபக்கங்களிலும் நேற்று வியாழக்கிழமை சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

இச்சிரமதான நடவடிக்கையானது திருக்கோவில் பொலிஸ் நிலையச் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலகம்இ அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.  

இதன்போது வீதியின்; இருமருங்குகளிலும் வசிக்கும் பொதுமக்கள் வர்த்தக நிலையங்களின்; உரிமையாளர்கள் ஆகியோருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .