2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'யுத்த வடுக்கள் துடைத்தெறியப்படும்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

'எமது இனத்தின் மீதான யுத்த வடுக்கள் துடைத்தெறியப்படும்வரை நாம் ஓயாமல் பணி செய்வோம்' என ஹின்ட்போஸ எய்ட் அமைப்பின் தலைவர் அருண்காந்த் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாங்கேணியில் இன்று வெள்ளிக்கிழமை (28) இலவச உடை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு, கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 'எமது இனம் உலக மரபுரிமை அடையாளம் கொண்டதொரு இனமாகும். நீண்ட நெடிய பாரம்பரியங்களையும் பண்பாடுகளையும் மரபுகளையும் உலகம் மெச்சும் நாகரிகத்தையும், அறிவியலையும் கொண்டிருந்த எமது இனம் இன்று கிழக்கு மாகாணத்தில் அநாதைகள் போல் சிதறுண்டு வறுமையால் வாடி வதங்கி படாத பாடுபட்டு வருகின்றனர்.

உங்களின் வறுமையை சில நபர்களோ நிறுவனங்களோ தங்களது நோக்கங்களை நிறைவு செய்துகொள்ள பயன்படுத்திக் கொள்கின்றனர். யுத்தத்துக்குப் பின்தான் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகமான காணிகளை இழந்து வருகின்றனர். அல்லது வறுமை காரணமாக தமது நிலங்களை அற்ப தொகைகளுக்கு விற்று வருகின்றனர். இங்குள்ள சில தாய்மார்கள் தங்களுடைய பெரும்பகுதி விவசாயக் காணிகளை வேறொரு சகோதர இனத்தவர்கள் பலவந்தமாக மிரட்டி தம்வசப்படுத்திவிட்டதாகவும் இதற்கு எம்மவர்களே உதவி செய்வதாகவும் கூறினார்கள்.

இந்த விடயம் சம்பந்தமாக பொலிஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை. இவர்களை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று சட்ட ரீதியாக அலுவல்களை மேற்கொள்ள உதவி செய்பவர்கள் யாருமே அற்ற நிர்க்கதி நிலைக்கு எமது இனம் உள்ளாக்கப்பட்டுள்ளதை நினைத்து மனம் நொந்து பேசுகின்றேன்.

இந்த கிராமத்தில் ஆண்களைக் காண்பது அரிதாக உள்ளது. இந்த ஆண் துணையற்ற நிலைமையை பயன்படுத்தி தான் பல்வேறு இனக்குழுக்கள் அல்லது நபர்கள் இவர்கள் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். நாம் எமது பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;'. என்றார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X