'கந்தில்பாவை' நாவல் வெளியீடு
03-11-2016 09:15 AM
Comments - 0       Views - 34

காயத்திரி விக்கினேஸ்வரன்

தேவகாந்தனின் 'கந்தில்பாவை'  நாவல் வெளியீடு, செவ்வாய்க்கிழமை (01) பிற்பகல் 3 மணிக்கு, கரவெட்டி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தெணியான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கரவெட்டி பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ கலந்துகொண்டு, நூலை வெளியிட்டு  வைத்ததுடன் நூலின் அறிமுகவுரையையும் நிகழ்த்தினார்.

1980 ஆம் ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் புரதான தலைநகராகக் கருதப்படும் கந்தரோடையையும், அதனைச் சூழ்ந்த பிரதேசத்தையும் கதைக்களமாகக் கொண்ட வரலாறு, ஐதீகம் என்ற இரட்டைத் தடங்களின் தன் புனைவுப் பயணத்தைச் நாவல் பதிவு செய்திருக்கின்றது.

"'கந்தில்பாவை' நாவல் வெளியீடு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty