கரடியை சாட்சியாக வைத்து திருமணம்
03-11-2016 06:58 PM
Comments - 0       Views - 201

புதுப்புது வழிகளில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உலகம் முழுவதும் தொற்றிக்கொண்டு வருகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த  ஜோடி ஒன்று தற்போது  இந்தப்பட்டியலில் இணைந்துள்ளது.

மொஸ்கோ நகரத்தை சேர்ந்த டெனிஸ், நிலியா ஜோடி வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து ஸ்டீபன் என்ற கரடியை தங்கள் திருமணத்துக்கு அழைத்து,  அதன் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இயற்கையான சூழலுக்கு மத்தியில், பூங்கொத்துகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தோரணத்தின் நடுவில் ஸ்டீபனை சாட்சியாக வைத்து டெனிஸ், நிலியா மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்கள் இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

3 மாதங்களில்  தனது தாயை இழந்து காட்டில் பரிதவித்த ஸ்டீபனை ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்வெட்லானா-யூரி, என்ற  தம்பதியர் தத்தெடுத்து வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

"கரடியை சாட்சியாக வைத்து திருமணம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty