'நீ, என்னை பல தடவைகள் வன்புணர்ந்துவிட்டீர்'
07-11-2016 12:05 PM
Comments - 0       Views - 4245

பிரதான விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக சேவையாற்றுகின்ற பெண்ணை, ஒருசில மணிநேரத்துக்குள் பல தடவைகள் வன்புணர்ந்தவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் வெலிக்கடை பொலிஸ் பிரிவிலேயே இடம்பெற்றுள்ளது.

இராணுவ சேவையை கைவிட்டுவிட்டு, இராணுவத்திலிருந்து தப்பியோடியிருந்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில், அந்த விமானப் பணிப்பெண், தனியாகவே வசித்து வந்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர், அந்தப் பணிப்பெண் தங்கியிருந்த வீட்டுக்கு அண்மையில் உள்ள வீட்டில் தச்சனாக வேலைச்செய்துகொண்டிருந்துள்ளார்.

சந்தேகநபர், அந்தப்பெண் தங்கியிருந்த வீட்டுக்குள் ஒருநாள் நுழைந்து, அப்பெண்ணின் அறையில் மறைந்திருந்துள்ளார். கடமையை முடித்துகொண்டு வீட்டுக்கு திரும்பிய அந்தப்பெண், தன்னுடைய அறைக்குள் நுழைந்ததும், அப்பெண்ணை மடக்கிப்பிடித்த சந்தேகநபர், கொலை அச்சுறுத்தல் விடுத்ததுடன் இரண்டு மணிநேரத்துக்குள் பல தடவைகள் அப்பெண்ணை வன்புணர்ந்துள்ளார் என்றும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

'நீ, என்னை பல தடவைகள் வன்புணர்ந்துவிட்டீர்...என் உடம்புக்கு வலிக்கிறது. குளியலறைக்கு நான்செல்லவேண்டும். போய் இரண்டொரு நிமிடங்களில் திரும்பிவந்துவிடுவேன். என்னை விட்டுவிடு, என்றுக்கூறி அந்தநபரை ஏமாற்றிவிட்டு, தான் மறைத்துவைத்திருந்த அலைபேசியின் ஊடாக, குளியலறையில் இருந்துகொண்டு பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில், ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸாரே, அந்த வீட்டுக்குள் சத்தமின்றி நுழைந்து சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர் என்று வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

"'நீ, என்னை பல தடவைகள் வன்புணர்ந்துவிட்டீர்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty