2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பறக்கும் விமானத்தில் பாம்பு (video)

George   / 2016 நவம்பர் 08 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்சிகோவின் டொரோன் பகுதியிலிருந்து தலைநகர் மெக்சிகோவுக்குப் பயணித்த “ஏரோ மெக்சிகோ 230” என்ற விமானம், நடுவானில் பறந்துக்கொண்டிருந்த போது பாம்பு ஒன்று விமானத்தில் புகுந்ததால் பயணிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தை, விமானத்தில் பயணித்த பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியார் ஒருவர்  வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

அதில், விமானத்தின் மேல்பகுயில் உள்ள பெட்டியிலிருந்து பச்சை நிறத்தில் ஐந்தடி பாம்பு ஒன்று சறுக்கி கீழே விழுகிறது. பாம்பை கண்டவுடன் பயணிகள், தங்கள் இடங்களை விட்டு வெளியேறி மற்ற பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாம்பு பயணிகளிடையே புகுந்தவுடன் அனைவரும் அலறியடித்து ஓடுகின்றனர்.

விமான ஊழியர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை முன்னதாகவே மெக்சிக்கோவில் தரையிறக்கும் படி விமானியிடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து, விலங்கு கட்டுப்பாடு அதிகாரிகள்  வந்து பாம்பை பிடித்துச் சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .