வரலாற்றில் இன்று: நவம்பர் 10
10-11-2016 12:00 AM
Comments - 0       Views - 32

1659: இந்தியாவில் மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி பாஜ்பூரி படைத்தளபதி அப்ஸால் கானை, பிரதாப்கார் சமரின்போது கொன்றார்.

1847: அயர்லாந்துக்கு அருகில் ஸ்டீபன் வைட்னி எனும் கப்பல் மூழ்கியதால் அதிலிருந்த 100 பேரில் 92 பேர் பலியாகினர்.

1969: அமெரிக்காவில் தேசிய சிறுவர் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1971: கம்போடியாவில் கெமரூஜ் படையினர் பினோம்பென் நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 9 விமானங்களை அழித்ததுடன் 44 பேரை கொன்றனர்.

1972: பேர்மிங்ஹாமில் இருந்து புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு ஹவானாவில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.

1993: தவளை நடவடிக்கை 1993 -  யாழ்ப்பாணத்தில் பூநகரி, நாகதேவந்துறை இராணுவக் கடற்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலை ஆரம்பித்தனர்.

1995: நைஜீரியாவில் சுற்றுச் சூழல் ஆதரவாளர் கென் சரோ-வீவா என்பவரும் அவரது 8 சகாக்களும் தூக்கிலிடப்பட்டனர்.

1999 - பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

2006: யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2008: செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்சு விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக நாசா அறிவித்தது.

"வரலாற்றில் இன்று: நவம்பர் 10" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty